சென்னை : மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நான்தான் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தேர்தலுக்கு இன்னும் 36 நாட்களே இருக்கிறது. நாங்கள் அடுத்த கட்ட வேளையில் இறங்கியிருக்கிறோம். மூத்த அரசியலாளர் முன்னாள் எம்.எல்.ஏ பழ கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில் இணைகிறார். சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பழ.கருப்பையா போட்டியிடுவார். நேர்மையாளர்களின் கூடாரத்துக்கு அவரை மனதார வரவேற்கிறேன்.
மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சட்டப் பஞ்சாயத்து இயக்கம், மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் வரவேற்போம். இவ்வாறு கமலஹாசன் தெரிவித்தார்.