சென்னை : துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னையில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில், துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் புகைப்படத்துடன் தகவல்களை பகிர்ந்துள்ளார்.அதில் முதல் கட்ட தடுப்பூசியை செலுத்திக் கொண்டேன். இன்னும் சரியாக 28 நாள்கள் இடைவெளியில் இரண்டாவது கட்ட தடுப்பூசியை செலுத்திக் கொள்வேன் என்று கூறியுள்ளார்.
அதுபோலவே தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதிவாய்ந்த மக்கள் அனைவரும் தாங்களாகவே முன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் கொரோனாவுக்கு எதிரான போரில் நாடு வெற்றி பெற ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.