எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பீஜிங் : கிழக்கு லடாக்கில் பங்கோங்சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து இந்தியாவும், சீனாவும் படைகளை விலக்கியுள்ளன. அங்கு மீதமுள்ள இடங்களிலும் படைகளை திரும்பப்பெறுவது தொடர்பாக கடந்த 9-ந் தேதி இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் சந்தித்து பேசினர்.
இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்த இந்த 11-வது சுற்று பேச்சுவார்த்தையில் கோக்ரா, தேப்சாங், ஹாட்ஸ்பிரிங் போன்ற பகுதிகளில் இருந்தும் படைகளை திரும்பப்பெறுவது தொடர்பாக இரு தரப்பும் விரிவாக பேசியதாக இந்திய ராணுவம் பின்னர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது.
அங்கு மேற்கொண்டு எந்த பிரச்சினைகளையும் ஏற்படுத்தாமல், தற்போதைய நிலைத்தன்மையை கூட்டாக பராமரிப்பது என்றும், நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை வேகப்படுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டதாகவும் அதில் கூறியிருந்தது.
இந்த நிலையில் எல்லையில் நிலவும் தற்போதைய சாதகமான போக்கை இந்தியா ஏற்க வேண்டும் எனவும், அங்கு அமைதியை பராமரிக்க வேண்டும் எனவும் சீன ராணுவம் கூறியுள்ளது. முந்தைய பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட ஒருமித்த முடிவை இருதரப்பும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அந்த நாடு கூறியுள்ளது.
சமீபத்திய பேச்சுவார்த்தை தொடர்பாக சீன ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் மற்றும் முந்தைய பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட ஒருமித்த முடிவுகளின்படி, எல்லையில் பதற்றத்தணிப்பு தொடர்பான தற்போதைய சாதகமான போக்கை இந்தியா ஏற்று, எல்லைப்பகுதிகளில் அமைதியை ஏற்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம்.
அத்துடன் எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை பராமரிக்கும் சீனாவின் இலக்கை நோக்கி நகர்வார்கள் எனவும் எதிர்பார்க்கிறோம்’ என்று கூறப்பட்டு இருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |