முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டாலினுக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 2 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை  தேர்தலில் வெற்றியை பெற்றதன் மூலம் தி.மு.க. ஆட்சியில் அமர்கிறது. ஸ்டாலினுக்கு பா.ஜ.க. தலையிடமிருந்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள், ம.தி.மு.க, வி.சி.க, ம.ம.க, ஐ.யூ.எம்.எல். உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்தித்தன. கடும் போட்டி நிலவிய இந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆகிறார். அவருக்கு வாழ்த்துகள் குவிகின்றன. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் எதிர் முகாமிலிருந்து அதுவும் பா.ஜ.க. டெல்லி தலைமையிடமிருந்து முதல் வாழ்த்து வந்துள்ளது. பா.ஜ.க. மூத்த தலைவர், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முதல்வராகப் பதவி ஏற்கவுள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்து. சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் தலைமையிலான தி.மு.க. கட்சி வெற்றி பெற்றுள்ளது என்று பதிவிட்டுள்ளார். 

இதேபோன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டுவிட்டரில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ஸ்டாலினுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து