முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம்: நடுவர்கள் பட்டியல் வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 8 ஜூன் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சவுதாம்ப்டன் : இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் பணியாற்றவுள்ள நடுவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் நகரில் வரும் 18-ம் தேதி தொடங்கவுள்ளது.  இதில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்று உள்ளது. 

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் பணியாற்றவுள்ள நடுவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மைக்கேல் காவ், ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகியோர் கள நடுவர்களாகவும் தொலைக்காட்சி நடுவராக ரிச்சர்ட் கெட்டில்பாரோவும் பணியாற்றவுள்ளார்கள். கிறிஸ் பிராட், போட்டியின் நடுவராகப் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் முடிந்த பிறகு,  இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 -ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 14 -ல் முடிவடைகிறது. இந்தச் சுற்றுப்பயணத்துக்காக இந்திய அணி இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து