முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபி ஜி ராம்ஜி புதிய சட்டத்திற்கு எதிராக தெலுங்கானா மாநில சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜனவரி 2026      இந்தியா
Telangana-Assembly

ஐதராபாத், விபி ஜி ராம்ஜி-க்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை திரும்பப் பெற்று, விபி ஜி ராம்ஜி என்ற பெயரில் புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் ஆளும், தெலுங்கானா மாநில சட்டமன்றம் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை தக்கவைத்துக்கொள்ளவும், அதற்குப் பதிலாக வந்த விபி ஜி ராம்ஜி ராம்ஜி சட்டத்தை ரத்து செய்யவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

புதிய விபி-ஜி ராம்ஜி சட்டம் ஏழைகளுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் அசல் நோக்கத்தை பலவீனப்படுத்தியதாகவும் சட்டமன்றத்தில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார். முன்னதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் நடந்த நிகழ்வில் பேசுகையில், "மகாத்மா காந்தியை முதல்முறை கோட்சே கொன்றார். இப்போது இந்த அரசு அவரை இரண்டாம் முறையாகக் கொல்கிறது.

இதன்மூலம் பஞ்சாயத்துகளுக்கு இருந்த அதிகாரங்களைப் பறித்துவிட்டு, இனி எந்த ஊருக்கு வேலை வழங்க வேண்டும் என்பதை டெல்லியில் இருந்து மத்திய அரசே முடிவு செய்யும். முன்பு 100 சதவீதம் ஊதியத்தை மத்திய அரசு வழங்கியது. இப்போது மத்திய அரசு 60 சதவீம் மட்டும் வழங்கும், மீதமுள்ள 40 சதவீதத்தை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்கிறார்கள். இது அரசியலமைப்பிற்கு எதிரானது.

பெண்கள், தலித்துகள் மற்றும் சூத்திரர்கள் கையில் பணம் புழங்கக்கூடாது, அவர்கள் சுயமரியாதையோடு வாழக்கூடாது என்று மனுஸ்மிருதி சொல்கிறது. ஆர்எஸ்எஸ் அந்த மனுஸ்மிருதியால் ஈர்க்கப்பட்டது. அந்த ஆர்எஸ்எஸ் தான் பாஜகவை வழிநடத்துகிறது. அதனால்தான் ஏழைகளின் வாழ்வாதாரமான இந்தத் திட்டத்தைச் சிதைக்கப் பார்க்கிறார்கள்." என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து