முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 உலகக் கோப்பை தொடர்: இந்தியாவில் விளையாட வங்கதேச அணி மறுப்பு

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜனவரி 2026      விளையாட்டு
T20-2026-01-04

டாக்கா, டி-20 உலகக் கோப்பை தொடரில் எங்களது போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே நடத்துங்கள் என்று ஐ.சி.சி.க்கு வங்கதேசம் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், இந்தியாவில் விளையாட மறுப்பு தெரிவித்துள்ளது.

ரூ.9.2 கோடிக்கு ஒப்பந்தம்.... 

ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் 7 வங்கதேச வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். இதில் வேகப்பந்து வீரர் முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட்டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேச வீரர் ஐ.பி.எல்.லில் விளையாட கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன.

விடுவிக்க வலியுறுத்தல்...

வங்கதேச கிரிக்கெட் வீரரை ஒப்பந்தம் செய்த அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானை தேச துரோகி என்று பா.ஜ.க, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. அவரை அணியில் இருந்து விலக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன. இதனால் நெருக்கடிக்கு உள்ளான பி.சி.சி.ஐ., வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரியது. பி.சி.சி.ஐ.-யின் உத்தரவை ஏற்று, முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ளது.

இலங்கைக்கு மாற்ற... 

ஐ.பி.எல்.லில் இருந்து முஸ்தபிசுர் நீக்கப்பட்ட நிலையில், ஆவேசமாக பேசிய வங்கதேச விளையாட்டு அமைச்சக ஆலோசகர் ஆசிப் நஸ்ருல், "டி20 உலக கோப்பையில் வங்கதேசத்தின் போட்டிகள் அனைத்தையும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும். ஐ.பி.எல்.லில் ஒப்பந்தம் போட்ட பிறகும், வங்கதேச வீரர் இந்தியாவில் விளையாட முடியாதென்றால், எப்படி வங்கதேச வீரர்களால் பாதுகாப்பாக உணர முடியும்? ஐ.பி.எல். போட்டிகளை வங்கதேசத்தில் ஒளிபரப்ப தடை செய்ய வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளேன். மேலும் எந்த சூழ்நிலையிலும் வங்கதேசத்தையோ எங்கள் வீரர்களையோ அவமதிப்பதை பொறுத்துக் கொள்ள மாட்டோம். அடிமை மனநிலையில் இருந்து எப்போதோ விடுபட்டு விட்டோம்" என்று தெரிவித்தார்.

வங்கதேச அரசு ஆலோசனை.... 

இந்த நிலையில் இந்தியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பையில் வங்கதேச போட்டிகள் அனைத்தையும், இந்தியாவிற்கு வெளியே நடத்தப்பட வேண்டும் என ஐ.சி.சி.-க்கு முறையாக வேண்டுகோள் விடுத்துள்ளது வங்கதேசம் கிரிக்கெட் போர்டு. பாதுகாப்பு கவலை அளிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. தற்போதுள்ள சூழ்நிலை மதிப்பீடு அளவின்படி, இந்தியாவில் வங்கதேச அணியின் பாதுகாப்பு குறித்து கவலை அதிகரித்து வரும் நிலையில், வங்கதேச அணியை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டுமா? என்பது குறித்து பரிசீலனை செய்யவும் என வங்கதேச அரசு ஆலோசனை வழங்கியுள்ளது. இதனடிப்படையில் வங்கதேச கிரிக்கெட் போர்டு, முறையாக ஐ.சி.சி.-க்கு வங்கதேச போட்டிகளை அனைத்தையும் வேறு இடத்தில் (இந்தியாவுக்கு வெளியில்) நடத்த பரிசீலனை செய்யுங்கள் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என பிசிபி தெரிவித்துள்ளது. இந்தியா- இலங்கை வருகிற பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை டி20 உலகக் கோப்பையைநடத்துகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து