முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபி-ஜி ராம் ஜி சிறந்த திட்டம்: மத்திய அமைச்சர் பெருமிதம்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜனவரி 2026      இந்தியா
Shivraj-Singh-Chouhan

புதுடெல்லி, மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை விட, விபி-ஜி ராம் ஜி சட்டம் சிறந்தது எனத் தெரிவித்துள்ளார். மேலும்,இந்த திட்டத்தை சிறந்ததாக உருவாக்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி நாம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொர்பாக சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது:- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை காப்போம் பிரசாரத்தை தொடங்க இருப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது உண்மையில் ஊழலை பாதுகாக்கும் பிரசாரம் ஆகும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாயப்பு திட்டம் ஊழலுக்கு இணையான ஒன்றாகிவிட்டது. கிராம சபைகளால் நடத்தப்பட்ட சமூகத் தணிக்கைகளின் கீழ், 10 லட்சத்து 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டன. ஒரே வேலை மீண்டும் மீண்டும் செய்யப்பட்டது. வேலை இயந்திரம் மூலம் செய்யப்பட்டது. கால்வாய்கள் மற்றும் சாலைகளைச் சுத்தம் செய்வதாகக் கூறி பணம் முறைகேடாகப் பெறப்பட்டது.

30 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் 60 வயதிற்கு மேலானவர்கள். மோடி அரசின் கீழ் 8.48 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியல் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. நிரந்தரச் சொத்துக்கள் உருவாக்கப்பட்டனவா? அந்தப் பணத்தை மேம்பாட்டுப் பணிகளுக்குப் பயன்படுத்த முடியுமா? காங்கிரஸ் ஒரு பொய்களின் தொழிற்சாலை. இப்போது அவர்கள் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்காது என்று கூறுகிறார்கள்.

விபி-ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் ஊழியர்களின் நலன் சிறப்பாக பாதுகாக்கப்படும். அடுத்த நிதியாண்டில் 1,51,282 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இதில் மத்திய அரசின் பங்கீடு 95,600 கோடி ரூபாயாக இருக்கும். 125 நாட்கள் வேலைக்கான போதுமான பணம் உள்ளது. இது கிராமங்களின் வளர்ச்சியை உறுதி செய்யும்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை விட விபி-ஜி ராம் ஜி சிறந்த திட்டமாக இருக்கும். தவறான தகவல் மற்றும் பொய்களை பரப்ப வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியை கேட்டுக் கொள்கிறேன். அதற்குப் பதிலாக இந்த திட்டத்தை சிறந்ததாக உருவாக்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து