முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.வி.எம். நிறுவனத்தை குறிப்பிடாமல் தமிழ் சினிமா பற்றி பேசவே முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜனவரி 2026      சினிமா      தமிழகம்
AVM-CM-2026-01-04

சென்னை, ஏ.வி.எம். சரவணன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏ.வி.எம். நிறுவனத்தை குறிப்பிடாமல் தமிழ் சினிமாவை பேசவே முடியாது என்றும், பராசக்தி வசனத்தை பேசி பள்ளியில் பரிசு பெற்றவர் ஏ.வி.எம். சரவணன் என்றும், கருணாநிதிக்கும் ஏ.வி.எம். நிறுவனத்துக்கும் நெருங்கிய நட்பு உண்டு என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

ஏ.வி.எம். நிறுவனத்தின் உரிமையாளரும், பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏ.வி.எம்.சரவணன் கடந்த டிசம்பர் 4-ந்தேதி காலமானார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி, புதுச்சேரி அரசின் சிகரம் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார். 

இந்நிலையில், ஏ.வி.எம்.சரவணன் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஏ.வி.எம். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மறைந்த ஏ.வி.எம்.சரவணன் உருவப்படத்தை திறந்து வைத்தார். படத்திறப்பு நிகழ்வில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு, ஏ.வி.எம்.சரவணன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது; ”ஏ.வி.எம். நிறுவனத்தை குறிப்பிடாமல் தமிழ் சினிமாவை பற்றி பேசவே முடியாது. பராசக்தி வசனத்தை பேசி பள்ளியில் பரிசு பெற்றவர் ஏ.வி.எம். சரவணன். ஏ.வி.எம். நிறுவன பொன் விழாவில் 190 கேடயங்களை மேடையில் நின்று கொண்டே கருணாநிதி வழங்கினார். கருணாநிதிக்கும் ஏ.வி.எம். நிறுவனத்துக்கும் நெருங்கிய நட்பு உண்டு.

நான் மேயராக இருந்த போது பள்ளி மாணவர்களை விமானத்தில் திருப்பதி அழைத்து செல்ல ஏ.வி.எம். சரவணன் காரணமாக இருந்தார். என்னதான் சட்டம் போட்டாலும் திருட்டு விசிடியை கட்டுப்படுத்த முடியாது என்று ஏ.வி.எம். சரவணன் கூறினார். கூத்து அழிந்து நாடகம் பிறந்தது, நாடகம்  அழிந்து சினிமா பிறந்தது; அதேபோல, காலத்திற்கு ஏற்ப கலை வடிவம் மாறும் என்று கூறியவர் ஏ.வி.எம். சரவணன்” இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார். 

முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருபதாவது;- சிகரங்களைத் தொட்டபோதும் எளிமையே தன் அடையாளம் என வாழ்ந்த 'உயர்ந்த உள்ளம்' ஏ.வி.எம். சரவணன். உடையால் மட்டுமல்ல, உள்ளத்தாலும் தூய்மையானவராக வாழ்ந்து காட்டிய சாதனையாளர்தான் ஏ.வி.என் சரவணன். தந்தை சம்பாதித்த பெயரைக் காப்பாற்றிய மகனாக, அனைத்துத் தரப்பினரின் நம்பிக்கையைப் பெற்ற தயாரிப்பாளராகத் தமிழ்த் திரையுலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் என்றும் போற்றுதலுடன் நினைவுகூரப்படும்.  எங்கள் குடும்ப நண்பராக மாசற்ற அன்பு பாராட்டிய ஏ.வி.எம். சரவணனுக்கு என் புகழஞ்சலி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து