முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜனவரி 2026      தமிழகம்
Amit-Shah 2023-11-17

திருச்சி, இரண்டு நாள் பயணமாக  தமிழ்நாடு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு பா.ஜ.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனின் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் திருக்கோகர்ணத்தில் பாலன் நகர் அருகே பள்ளத்திவயல் பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசினார்.

இதையொட்டி பாதுகாப்பு காரணம் கருதி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்து. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

முன்னதாக மேலும், பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை கூடுதல் டி.ஜி.பி. மகேஸ்வர தயாள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஜோஸ் நிர்மல் குமார், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா ஆகியோர் உடன் இருந்தனர்.

நேற்று மாலை புதுக்கோட்டையில் நடைபெறும் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் பரப்புரை பயண நிறைவு விழாவில் அமித் ஷா பங்கேற்க தமிழகம் வந்தார். அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து