முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆகஸ்ட் 2-ல் யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு துவக்கம்

வியாழக்கிழமை, 10 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸின் 2020-க்கான நேர்முகத் தேர்வு வருகின்ற ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட யு.பி.எஸ்.சி. நேர்முகத் தேர்வு கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் எனவும், இதற்கான அழைப்பு upsc.gov.in, upsconline.in ஆகிய இணையதளங்களில் விரைவில் பதிவேற்றப்படும் என யு.பி.எஸ்.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது.

வரும் 27-ம் தேதி நடைபெறவிருந்த யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வுகள் அக்டோபர் 21-க்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேர்முகத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து