முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் தொடர்ந்து 4-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்திற்கு கீழே குறைந்தது

வெள்ளிக்கிழமை, 11 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் தொடர்ந்து 4-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. அந்த வகையில் தொடர்ந்து 4-வது நாளாக நேற்று கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்கள் குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.  அதன்படி, 

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 91 ஆயிரத்து 702 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 92 லட்சத்து 74 ஆயிரத்து 823 ஆக அதிகரித்துள்ளது.  வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 11 லட்சத்து 21 ஆயிரத்து 671 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 580 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  இதனால், நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 77 லட்சத்து 90 ஆயிரத்து 73 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தாக்குதலுக்கு 3 ஆயிரத்து 403 பேர் உயிரழ்ந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 63 ஆயிரத்து 79 ஆக அதிகரித்துள்ளது.  இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 24 கோடியே 60 லட்சத்து 85 ஆயிரத்து 649 ஆக அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து