முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை மாற்றம்: 43 மத்திய அமைச்சர்கள் பதவி ஏற்றனர் தமிழக பா.ஜ.க. தலைவர் எல். முருகன் மத்திய மந்திரியானார்

புதன்கிழமை, 7 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில், தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், ஜோதிராதித்யா சிந்தியா உட்பட 43 பேர் அமைச்சர்களாக ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் பதவியேற்று கொண்டனர். புதிதாக பதவியேற்றுக் கொண்டவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

கடந்த, 2019 லோக்சபா தேர்தலில் வென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அமைந்துள்ளது. மொத்தம் 81 பேர் அமைச்சரவையில் இடம்பெறலாம் என்ற நிலையில் தற்போது 53 பேர் உள்ளனர். மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என, கடந்த சில வாரங்களாகவே பேசப்பட்டு வந்தது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்சியின் பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷ் ஆகியோருடன் பிரதமர் மோடி கடந்த திங்கட்கிழமை இரவு நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.  இந்நிலையில் மத்திய அமைச்சர் தன்வர் சந்த் கெலாட், கர்நாடக மாநில கவர்னராக நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். அதனால் மத்திய அமைச்சரவை மாற்றம் உறுதியானது. அதை தொடர்ந்து மத்திய அமைச்சரவையை பிரதமர் மோடி விரிவாக்கம் செய்தார். 

இந்த நிலையில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடந்தது. மாலை, 6:05 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வந்தார். அதை தொடர்ந்து புதிய அமைச்சர்களாக 43 பேருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள் விபரம் வருமாறு:-

01. நாராயன் ரானே

02. சர்பானந்தா சோனாவல்

03. விரேந்திர குமார்

04. ஜோதிராதித்யா சிந்தியா

05. ராமசந்திர பிரசாத் சிங்

06. அஸ்வினி வைஸ்னவ்

07. பசுபதி குமார் பராஸ்

09. கிரண் ரிஜ்ஜூ

09. ராஜ்குமார் சிங்

10. ஹர்திப் சிங் புரி

11. மன்சுக் மாண்டலியா

12. பூபேந்தர் யாதவ்

13. பர்ஷோத்தம் ருபலா

14. ஜி கிஷண் ரெட்டி

15. அனுராக் சிங் தாகூர் (நிதித்துறை இணை அமைச்சராக இருந்தவர்)

16. பங்சஜ் சவுத்ரி

17. அனுப்பிரியா சிங் படேல்

18. சத்யபால் சிங் 

19. ராஜீவ் சந்திரசேகர்

20. ஷோபா 

21. பானு பிரதாப் சிங் வர்மா

22. தர்ஷன விக்ரம் ஜர்தோஸ்

23. மீனாட்சி லேகி

24. அன்பூர்ணா தேவி

25 நாராயண சுவாமி

26. கவுஷல் கிஷோர்

27. அஜய் பட்

28. பி.எல். வர்மா

29. அஜய் குமார்

30. சவுகான் தேவ் சிங்

31. பகவன்த் குபா

32. ஸ்ரீகபில் மோர்ஸ்வர் பட்டீல்

33. பிரதிமா பவுமிக்

34. சுபாஷ் சர்கார்

35. பக்வந்த் கிஷன்ராவ் காரத்

36. ராஜ்குமார் ரஞ்சன் சிங்

37. பார்தி பிரவின் பவார்

38. பிஸ்வேஸ்வர் டுடு

39. சாந்தனு தாகூர்.

40. முஞ்சபரா மகேந்திரபாய்

41. ஜான் பர்லா

42. எல். முருகன்

43. நிஷித் பிரமனிக் 

ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டுள்ளனர். இதன் மூலம் மத்திய அமைச்சரவையின் பலம் 77 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 7 பேர் பெண்கள் மற்றும் 8 பேர் மருத்துவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

 

முன்னதாக அமைச்சரவை விரிவாக்கத்தை தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் ஹர்ஷவர்தன், ரமேஷ் பொக்ரியால், சந்தோஷ் கங்வார், பாபுல் சுப்ரியோ, சதானந்தா கவுடா உள்ளிட்ட 11 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து