முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனிமியை தெறிக்கவிட்ட சாம் சி.எஸ்

வெள்ளிக்கிழமை, 30 ஜூலை 2021      சினிமா
Image Unavailable

Source: provided

ஆனந்த்சங்கர் எழுதி இயக்க மினி ஸ்டுடியோஸ் சார்பாக வினோத் குமார் தயாரிக்கும் படம் எனிமி. இப்படத்தில் ஆர்யாவும் விஷாலும் நாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் மிருணாளினி ரவி, பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ் இன்னும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில்  வெளியானது.

ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் எனிமி படத்திற்கு சாம் சி.எஸ். பின்னணி இசையை அமைத்துள்ளார். பின்னணி இசையைக் கேட்ட இயக்குநரும் தயாரிப்பாளரும் உற்சாகமடைந்துள்ளனர். மேலும்,  சாம் சி எஸ் ஸின் பின்னணி இசை ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் நிச்சயம் கவரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

இப்படத்தின் ஒளிப்பதிவை ஆர்.டி.ராஜசேகரும், படத்தொகுப்பை ரேமண்ட் டெரிக் கிரஸ்டாவும் செய்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து