12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்று நிலச்சரிவில் பெற்றோரை இழந்த கேரள மாணவிக்கு கமல் பாராட்டு

Kamal 2021 07 31

Source: provided

சென்னை : நிலச்சரிவில் பெற்றோரை இழந்த கேரள மாணவி கோபிகா, பிளஸ் 2 தேர்வில்  A+ மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளதை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.

கேரளாவில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குக் கடந்த 29-ம் தேதி தேர்வு முடிவு வெளியானது. இதை மாநிலக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார். இந்நிலையில் கேரளப் பொதுத் தேர்வு முடிவுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவி கோபிகாவை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

கடந்த ஆண்டு நிலச்சரிவில் தாய், தந்தை உள்பட 24 உறவினர்களை இழந்தார் கேரள மாணவி கோபிகா. 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் A+ மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். இழப்பின் பெருவலியைப் பொறுத்துக்கொண்டு உழைத்திருக்கிறார். இந்த மனவலிமை போற்றுதலுக்குரியது என்று கமல் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து