மாநிலங்களவை இடைத்தேர்தல்: அரசு விடுமுறை நாளான 18-ம் தேதியும் மனுக்கள் பெறப்படும் என அறிவிப்பு

Election 2021 09 15

Source: provided

சென்னை : மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் அரசு விடுமுறை நாளான 18-ம் தேதியும் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து சட்டமன்ற பேரவை செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 

மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கே.பி. முனுசாமி மற்றும் ஆர். வைத்திலிங்கம் ஆகியோர் பதவி விலகியதையடுத்து,                     செப்டம்பர் - அக்டோபர் 2021-ல் தனித்தனியாக நடைபெறவுள்ள மாநிலங்களவை இடைத்தேர்தல்களுக்கான வேட்பு மனுக்கள் 18.09.2021-ஆம் நாள், சனிக்கிழமை அரசு விடுமுறை நாளாக இருப்பினும், அன்று காலை  11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது தேர்தல் நடத்தும் உதவி அதிகாரியால் பெற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து