பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்: ஓ.பி.எஸ். - இபிஎஸ், மரியாதை

EPS-OPS 2021 07 23

Source: provided

சென்னை : அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். 

பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று காலை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், ஓ. பன்னீர்செல்வம், தேனி மாவட்டம், பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அமைப்புச் செயலாளர் ஜக்கையன், தேனி மாவட்டக் கழகச் செயலாளர் சையதுகான் உள்ளிட்டோரும் அண்ணாவின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். தேனியில் உள்ள அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருவுருவப் படத்திற்கும் அ.தி.மு.க.வினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதுபோன்று எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை, அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, ஆர். வைத்திலிங்கம், பொன்னையன் உள்ளிட்ட நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து