முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தும் பா.ஜ.க அரசு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதன்கிழமை, 6 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

விவசாயிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதாக பா.ஜ.க  மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.

விவசாயிகள் மீது முறைசார்ந்த வகையில் மத்தியில் ஆளும் மோடி அரசும் உத்தர பிரதேசத்தில் ஆளும் யோகி ஆதித்யநாத் அரசும் தாக்குதல் நடத்தி வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, லக்கிம்பூர் செல்ல தமக்கு உத்தர பிரதேச காவல்துறை அனுமதி மறுத்திருக்கலாம். ஆனால், நான் லக்னோவுக்கு எனது நண்பர்கள் இருவருடன் செல்கிறேன் என்று தெரிவித்தார். இதே லக்னோ நகரில்தான் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய சுதந்திர தினத்தின் 75-ம் ஆண்டை கொண்டாடும் மாநாட்டில் பங்கேற்கிறார். அவருக்கு லக்கிம்பூரில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லை.

சுதந்திர இந்தியாவில் அரசியல் தலைவர்களால் ஒரு இடத்துக்கு செல்ல முடியவில்லை. லக்கிம்பூரிக்கு செல்ல முயன்றோம். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது. சத்தீஸ்கர் முதல்வர் லக்னோ சென்றபோதும் அவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதைத்தான் சர்வாதிகாரம் என்கிறோம்.

 

மத்தியில் உள்துறை இணை அமைச்சராக இருக்கும் ஒருவரது மகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கார் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கொல்ல முற்படுகிறார்கள். சில விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளனர். அங்குள்ள கள நிலவரத்தை பார்க்க நான் விரும்புகிறேன் ஆனால், அனுமதி கிடைக்கவில்லை. இவ்வாறு ராகுல் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து