முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனமழைக்கு இதுவரை 16 பேர் பலி: உத்தராகண்ட் முதல்வருடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

செவ்வாய்க்கிழமை, 19 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

டேராடூன் : உத்தரகாண்டில் ஏற்பட்ட கனமழை- வெள்ளத்திற்கு இதுவரை 16 பேர் பலியாகியுள்ள நிலையில் அம்மாநில முதல் மந்திரியிடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நிலைமை குறித்து கேட்டறிந்தார்.

வட மாநிலங்களில் ஒன்றான உத்தரகாண்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தின் பல  பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர் கனமழை காரணமாக அணைகளின் நீர்வரத்து அதிகரிப்பால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்கு 65 சதவீத சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மழை மற்றும் வெள்ளத்தால் அங்குள்ள பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தராகண்ட் மாநிலத்தின் கர்வால், குமான் பகுதியில் பலத்த மழை காரணமாக குறைந்தது 16 பேர் பலியாகியுள்ளனர். இந்த தகவலை அந்த மாநில பேரிடர் மேலாண்மை படை துணைத் தலைவர் ரித்திம் அகர்வால் உறுதிப்படுத்தியிருக்கிறார். நைனிடால், அல்மோரா பகுதியில் ஐந்து பேர், பாரி கர்வால் பகுதியில் நான்கு பேர், சம்பாவாட், பித்தோரகர் பகுதியில் தலா ஒருவர் ஆகியோர் இறந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டு வருகிறது. நைனிடால், சம்பாவாட், பித்தோரகர், பாகேஸ்வர் ஆகிய இடங்களில் தொடர்ந்து மழை பொழிந்து வருவதால் மீட்புப்பணிகளில் தொய்வு காணப்படுகிறது.

மழை மற்றும் வெள்ளத்தின் பாதிப்பு நிலவரம் குறித்து  பிரதமர் மோடி அம்மாநில முதல் மந்திரி புஷ்கர் சிங்கிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். மேலும் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசு செய்யும் என்றும் பிரதமர் உறுதியளித்து உள்ளார்.

உத்ராகண்ட் மாநிலத்தில் ஏற்கனவே கனமழை பெய்துவரும் நிலையில், ஹரித்துவார், உத்தம்சிங் நகர், உத்தரகாசி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றும் வீச வாய்ப்புள்ளதாகவும், உத்தரகாசி, ருத்ரபிரயாக் உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து