முக்கிய செய்திகள்

ரோபோட்ஸ்களுடன் சண்டை போடும் ஜெய்

Jay 2021 10 24

Source: provided

ராகுல் பிலிம்ஸ் சார்பில் கே.திருக்கடல் உதயம் தயாரிப்பில், ஜெய் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘பிரேக்கிங் நியூஸ்’. ரோபோடிக்ஸ் டெக்னாலஜி மற்றும் அனிமேஷனை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் கதாநாயகியாக பானுஸ்ரீ, சினேகன், பழ.கருப்பையா, அழகிய தமிழ்மணி, தேவ்கில், ராகுல் தேவ், ஆகியோர் நடிக்கின்றனர்.

அதிக பொருட்செலவில் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் ஜெய் ரோபோட்ஸ்களுடன் சண்டைபோடும் காட்சிகள் எடுக்கப்பட்டு VISUAL EFFECTS வேலைகள் நடந்துக்கொண்டு இருப்பதாக படத்தின் இயக்குனர்  ஆண்ட்ரூ பாண்டியன் தெரிவித்துள்ளார். இப்படத்தில், ஒளிப்பதிவாளர் ஜானிலால்/வில்லியம்ஸ், எடிட்டர் ஆண்டனி, கலை  மகேஷ், VFX பிரபாகரன், இசை விஷால் பீட்டர். சமீபத்தில்  நடந்த படப்பிடிப்பில் ஐந்தாயிரம் துணை நடிகர்களோடு, சினேகன் போராட்டக்களத்தில் போராளியாக நடித்து அனைவரின் கைதட்டல்களைப் பெற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து