முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரன்கள் மற்றும் குடும்பத்தினருடன் அண்ணாத்த படத்தை பார்த்து ரசித்தார் நடிகர் ரஜினிகாந்த்

வியாழக்கிழமை, 28 அக்டோபர் 2021      சினிமா
Image Unavailable

மகள், மருமகன், பேரன்களுடன் அண்ணாத்த திரைப்படத்தை பார்த்து ரசித்ததாக தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், படத்தை பார்த்த தனது பேரன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையில் திரைக்கு வருகிறது. இதில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 கதாநாயகிகள் உள்ளனர். சிவா இயக்கி உள்ளார். கிராமத்து கதையம்சத்தில் தயாராகி உள்ளது. பாடல்கள் அடுத்தடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்த அண்னாத்த படத்தின் ட்ரெய்லர் 5.7 மில்லியன் பார்வைகளை கடந்து யூயுயூப் டிரெண்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளது. இந்தநிலையில்,  மகள், மருமகன், பேரன்களுடன் அண்ணாத்த திரைப்படத்தை பார்த்ததாக நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் படத்தை பார்த்த தனது பேரன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாக ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து