முக்கிய செய்திகள்

பாலிவுட்டில் கால் பதிக்கும் மஹத் ராகவேந்திரா

திங்கட்கிழமை, 22 நவம்பர் 2021      சினிமா
Mahat-Raghavendra 2021 11 2

Source: provided

பாலிவுட்டில் தனது பயணத்தை துவங்கியுள்ளார் நடிகர் மஹத் ராகவேந்திரா. இயக்குநர் சத்ரம் ரமணி இயக்கத்தில், முதாஸ்ஸர் அஜிஸ் கதை, திரைக்கதை எழுதி தயாரிக்கும், புதிய திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் நாயகனாக அறிமுகமாகிறார் மஹத் ராகவேந்திரா. மங்காத்தா புகழ் நடிகர் மஹத் ராகவேந்திரா, இப்படத்தில் நடிகர் ஜாஹிர் இக்பாலுடன் இணைந்து மற்றொரு நாயகனாக நடிக்கின்றார். பாலிவுட்டின் மூத்த நட்சத்திரங்களான சோனாக்‌ஷி சின்ஹா, ஹீமா குரேஷி ஆகியோர் இப்படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். லண்டனில் 30 நாட்கள் படப்பிடிப்பை முடித்து விட்டு, தற்போது  டெல்லியில் தனது கதாபாத்திரத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பில் பங்கு கொண்டுள்ளார் மஹத் ராகவேந்திரா. மேலும் அவர் கூறுகையில்.. இப்படம் குறித்து இப்போதைக்கு எந்த தகவலையும் கூற முடியாது. ஆனால் இது பெண்களுக்கு ஒரு செய்தியை அழுத்தமாக கூறும் படமாக இருக்கும் என்றார். மேலும், இந்த வாய்ப்பு நான் நினைத்தே பார்த்திராத, ஒரு கனவு குழுவுடன் இணைந்து பணியாற்றியிருப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து