முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்மாவட்ட ரயில்களில் அரையாண்டு விடுமுறைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பு

சனிக்கிழமை, 25 அக்டோபர் 2025      தமிழகம்
Train 2023-04-06

Source: provided

சென்னை: தென்மாவட்ட ரயில்களில் அரையாண்டு விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பா நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படும். அதன்படி, 7 முதல் 10 நாட்கள் வரை தொடர் விடுமுறை கிடைக்கும். இதனால் சென்னையில் வசிப்பவர்கள், தொழில் செய்பவர்கள் என பலரும் தங்களுடைய குடும்பங்களுடன் சொந்த ஊர் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல திட்டமிடுவார்கள். இதுபோன்ற விடுமுறை தினங்களை கொண்டாட சொந்த ஊர் செல்வோர் முதலாவதாக ரெயிலை தேர்வு செய்து பயணம் செய்வது வழக்கமான ஒன்றாக உள்ளது. அதன்படி, அரையாண்டு விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் வசதிக்காக (டிசம்பர் 22-ந்தேதி) ரயில் டிக்கெட் முன்பதிவு கடந்த 3 தினங்களுக்கு முன்பு காலை 8 மணிக்கு தொடங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வழியாகவும், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலமாகவும் முன்பதிவு நடைபெற்றது.

முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் தென்மாவட்டம் செல்லும் கன்னியாகுமரி, அனந்தபுரி போன்ற ரயில்களில் டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்தன. நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆர்.ஏ.சி.க்கு வந்துவிட்டது. பொதிகை, முத்துநகர், கொல்லம், குருவாயூர், செந்தூர் போன்ற தென்மாவட்ட ரயில்களில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதேபோல டிசம்பர் 24-ந்தேதி சொந்த ஊர் செல்பவர்கள் நேற்று (சனிக்கிழமை), டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று சொந்த ஊர் செல்பவர்கள் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) முன்பதிவு செய்யலாம். முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து