முக்கிய செய்திகள்

தன்னை தானே விவாகரத்து செய்து கொண்ட மாடல் அழகி

புதன்கிழமை, 24 நவம்பர் 2021      உலகம்
Chris-Cholera 2021 11 24

பிரேசிலை சேர்ந்த மாடல் அழகியான கிறிஸ் கலேரா தற்போது தன்னை தானே விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

பிரேசில்  ​நாட்டை சேர்ந்தவர் 31 வயதான மாடல் அழகி கிறிஸ் கலேரா. கடந்த காலங்களில் உறவு முறிவுகளால் ஏற்பட்ட விரக்தி காரணமாக தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ள அவர் முடிவெடுத்தார். அதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் பிரேசிலின் பிரபல கத்தோலிக்க தேவாலயத்தில் தன்னை தானே கிறிஸ் கலேரா திருமணம் செய்து கொண்டார். 

தனது வாழ்க்கையில் தனியாக இருக்க பயம் கொள்ளும் சுபாவம் உடைய பெண்ணான தான் தற்போதைய நிலையில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அதனை உணர்ந்த நிலையில் அதனை கொண்டாட முடிவு  செய்து தன்னை தானே திருமணம் செய்து கொண்டதாகவும் கிறிஸ் கலேரா அப்போது கூறியிருந்தார்.

 

இந்நிலையில், தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட 90 நாட்களுக்கு உள்ளாகவே தன்னை தானே விவாகரத்து செய்வதாக அவர் அறிவித்துள்ளார். மிகவும் சிறப்பு வாய்ந்த நபர் ஒருவரை சந்தித்ததாகவும் தற்போது காதல் மீது நம்பிக்கை வந்துள்ளது என்றும் தெரிவித்துள்ள அவர்,  விவாகரத்து செய்து கொள்வது வரை தன்னுடனான தனது வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து