முக்கிய செய்திகள்

தமிழ்மகன் உசேன், அ.தி.மு.க.வின் தற்காலிக அவைத் தலைவராக தேர்வு

புதன்கிழமை, 1 டிசம்பர் 2021      அரசியல்
Tamilmakan 2021 12 01

அ.தி.மு.கவின் தற்காலிக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

அ.தி.மு.கவின் மூத்த தலைவரும், அக்கட்சியின் அவைத் தலைவராக இருந்த மசூதனன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இந்த நிலையில், நேற்று அ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று கூடியது. இந்த செயற்குழு கூட்டத்தில் தமிழ்மகன் உசேன் அ.தி.மு.கவின் அவைத் தலைவராக தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்மகன் உசேன் அ.தி.மு.க ஆட்சியில் வக்ஃபு வாரியத் தலைவராக பதவி வகித்திருக்கிறார். அ.தி.மு.கவின் தற்காலிக அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்மகன் உசேனுக்கு ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஆகியோர் மலர்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து