எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொங்கல் பரிசுப் பையின் முகப்பில் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது கருத்துத் திணிப்பு என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து, மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை, மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை, கல்விக் கட்டணம் ரத்து, முதியோர் உதவித் தொகை உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டம் என தி.மு.க.வால் அள்ளி வீசப்பட்ட வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்?
வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் எப்போது வழங்கப்படும் என்று மக்கள் காத்திருந்த நிலையில், மக்கள் எண்ணத்திற்கு முற்றிலும் மாறான வகையில், 2022-ம் ஆண்டு பொங்கல் பரிசுப் பையின் முகப்பில், இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளது தமிழக மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் விதமாக அமைந்துள்ளது.
தமிழ்நாட்டிலே பல நூற்றாண்டுக் காலமாக சித்திரை மாதப் பிறப்பு தான் தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது இந்த மரபினை சீர்குலைக்கும் விதமாக எவ்வித வலுவான ஆதாரமும் இல்லாமல், தை மாதம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு வழிவகை செய்யும் சட்டம் முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில், 2008-ம் ஆண்டு இயற்றப்பட்டது.
பண்டிகை என்பது இதுநாள் வரை கடைபிடித்து வந்த முறைப்படி, மரபுப்படி, கலாச்சாரத்தின்படி, பழக்கவழக்கத்தின்படி கொண்டாடப்படுவது. இதற்கு எதற்குச் சட்டம்? இதில் ஏன் அரசு தலையிடுகிறது? என்பதுதான் மக்களின் வாதமாக இருந்தது. எனவேதான், சட்டம் இயற்றப்பட்டும், தமிழக மக்கள் சித்திரை முதல் தேதியையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வந்தனர்.
கடந்த 2011-ம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டு நீக்கச் சட்டமுன்வடிவை 23.08.2011 அன்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி சட்டமாக்கினார். இந்தச் சட்டத்தின்படி, தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற சட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், 2022-ம் ஆண்டு பொங்கல் பரிசுப் பையின் முகப்பில் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் கண்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.
எந்தெந்த பண்டிகையை எப்படிக் கொண்டாட வேண்டும், எப்பொழுது கொண்டாட வேண்டும் என்று முடிவு மக்களிடத்தில் தான் இருக்கிறது. அதை மக்கள் விருப்பப்படி விட்டுவிடுவது தான் நல்லது. எனவே, தமிழக முதல்வர் மக்களின் உணர்ச்சிகளுக்கு, கருத்துகளுக்கு மதிப்பளித்து, சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற நடைமுறை, மரபு, கலாச்சாரம் தொடர்ந்திடவும், தமிழக மக்களின் நம்பிக்கைக்கு எதிராக பொங்கள் பையில் இடம்பெற்றுள்ள வாசகத்தை நிறுத்திடவும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026 -
சென்னை சங்கமம் - 2026 நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
13 Jan 2026சென்னை, பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
-
பொங்கல் பண்டிகை தினத்தன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
13 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பொங்கல் பரிசை பெறாதவர்கள் இன்று பெற்றுக்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு
13 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் இன்றும் (ஜன. 14) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Jan 2026சென்னை, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்காக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி
-
ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
மாநில அரசுகள் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: தெரு நாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
13 Jan 2026புதுடெல்லி, கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தெரு நாய்க்கட
-
தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் சார்பில் 80.62 கோடி ரூபாய் செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
சென்னையில் தே.ஜ. கூட்டணியினரின் பொதுக் கூட்டம்: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது
13 Jan 2026சென்னை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் வருகிற 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் எனத் தகவல்கள் தெ
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
சர்வம் ஏ.ஐ. நிறுவனத்துடன் ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
13 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை வழங்கும் விதமாக சர்வம் ஏ.ஐ.
-
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25 சதவீத வரி: அதிபர் ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு
13 Jan 2026நியூயார்க், ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


