முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. நிலை விரைவில் மாறும்: சசிகலா அறிக்கை

வியாழக்கிழமை, 2 டிசம்பர் 2021      அரசியல்
Image Unavailable

அ.தி.மு.க.வை விரைவில் மாற்றிக் காட்டுவோம் என்றும் அனைத்து அடிமட்ட தொண்டர்களும் சந்தோசமாக கவலையின்றி இருக்குமாறும் சசிகலா தெரிவித்துள்ளார்.

இது குறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசியல் எதிரிகளின் குழ்ச்சிகளுக்கு இரையாகாமல் அ.தி.மு.க.வையும் அதன் தொண்டர்களையும் காப்பதே தமது முதல் கடமை. இந்த கொள்கையை மனதில் கொண்டுதான் எனது வாழ்க்கை பயணம் இந்த நொடியிலும் சென்று கொண்டிருக்கிறது.

தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு அ.தி.மு.க. பயன்பட்டதில் இருந்து அதன் மதிப்பு குறைந்தது. மேலும் தன் தொண்டர்களையும் அக்கட்சி மறந்தது. இதனால் ஏளன பேச்சுகளும் சிறுமைப்படுத்துவதும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. ஒதுக்கப்பட்டவர்கள், தாங்களாக ஒதுங்கி கொண்டு செயல்படாமல் இருப்பவர்கள் அனைவரும் கவலைப்படாமல் சிறிது காலம் பொறுத்திருங்கள். விரைவில் அ.தி.மு.க. நிலை மாறும். தலை நிமிரும். இது உறுதி.

இவ்வாறு சசிகலா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து