முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மாநகர் சாலைகள் மேம்படுத்தும் பணிகள் அலுவலர்களுடன் அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு

சனிக்கிழமை, 22 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

சென்னை தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத்துறையின் மூலம், ”சென்னை மாநகரின் சாலைகளை மேம்படுத்தும் பணிகளை செயல்படுத்தும் போது உள்ள இடர்பாடுகளை களைவதற்கான, பிற துறைகளான எல்காட், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தெற்கு ரயில்வே, மின்வாரியம் மற்றும் நீர்வளத்துறை ஆகிய துறைகளை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் தலைமையில் நேற்று நடை பெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்தில், அமைச்சர் பி.கே.சேகர் பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், எல்காட், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தெற்கு இரயில்வே, மின்வாரியம், நீர்வளத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து