முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து குளங்களிலும் காவிரி நீரை நிரப்பும் திட்டத்தின் மூலம் வேடசந்தூர் வளமான தொகுதியாக மாறும்: காந்திராஜன் எம்.எல்.ஏ பேச்சு

திங்கட்கிழமை, 24 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

குஜிலியம்பாறை :     வேடசந்தூர் தொகுதியில் உள்ள அனைத்து குளங்களிலும் காவிரி நீரை நிரப்பும் திட்டத்தின் மூலம் வறட்சியான தொகுதி வளமான தொகுதியாக மாறும் என்று எம்.எல்.ஏ காந்திராஜன் தெரிவித்தார்.

பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ50 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. எம்.எல்.ஏ காந்திராஜன் தலைமை வகித்து வளர்ச்சிப் பணிகளை துவக்கி வைத்தார். இராமகிரி ஆர்.சி. காலணி மற்றும் கூட்டக்காரன்பட்டியில் தலா 4.50லட்சம் மதிப்பில் ஆழ்குழாய் மினி டேங்க் மோட்டர் பொருத்துதல் வீரக்கவுண்டன்பட்டி மற்றும் சாணிபட்டியில் தலா ரூ10 லட்சம்  மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுடன் மேல் நிலைத் தொட்டி அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ காந்திராஜன் பேசும் போது தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் எல்லாம் தற்போது படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. 

தமிழகத்திலே வேடசந்தூர் தொகுதி மிகவும் வறட்சி பகுதி வேடசந்தூர் தொகுதியில் உள்ள 183குளங்களும் பெரும்;பான்மையாக வருடம் முழுவதும் வறண்டு கிடக்கிறது இதனால் இத்தொகுதியில் உள்ள மக்களுக்கு மழையை நம்பியுள்ள காரணத்தால் விவசாயம் ஒரு சூதாட்டம் என்ற நிலையில் மக்கள் தங்கள் வாழ்க்கையை வறுமை நிலையோடு ஆடு,மாடு போன்ற கால்நடைகளை வளர்ப்பதற்கு கூட தண்ணீரில்லாமல் அவதிப்படுகின்றனர்.  தேர்தல் வாக்குறுதிப்படி  தொகுயில் உள்ள 183 குளங்களுக்கும் காவிரி நீரை கொண்டு வந்து நிரப்புவதற்கான திட்டத்தை ஆய்வு செய்து அதற்கான திட்ட மதிப்பீடு 1000 கோடி அதற்கான திட்ட அறிக்கை தமிழக முதல்வரிடம் பட்ஜெட் தொடரில் அளிக்கப்பட்டது. இதற்கான நிதி ஒதுக்கியவுடன் பணிகள் உடனடியாக தொடங்கப்படும் இத்திட்டத்தின் மூலம் 100மூ வறட்சியை தீர்க்கமுடியும். விவசாயத்தை நம்பி வாழும் மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்  ஏனென்றால் இதே திட்டம் ஆந்திர மாநிலம்  தும்கூர் மாவட்டம் சிரா சட்டமன்ற தொகுதியில் செயல் படுத்தப்பட்டு மிகவும் பின்தங்கி வறட்சிப் பகுதியாக இருந்த அத்தொகுதி இன்று விவசாயத்தில் ஒரு மிகப் பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது என்பதை நான்   சில வருடங்களுக்கு முன்பு  அங்கு சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்த போது உணர முடிந்தது

எனவே தான் இந்த திட்டத்தை கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்ற  முடிவுக்கு வந்தேன.; இத்திட்டத்தின் மூலம் வேடசந்தூர் தொகுதி  மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படும். மேலும் நான் 1993 இல் தமிழகத்தின் குடிநீர்  வடிகால் வாரிய  தலைவராக இருந்த போது வேடசந்தூர் தொகுதியில் நிலவிய கடுமையான குடிநீர் பஞ்சத்தை தீர்ப்பதற்காக என்னுடைய முயற்சியால்  கொண்டு வரப்பட்டது தான் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் அன்று கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தில் வேடசந்தூர்  தொகுதிமக்களுக்கு குடிநீர் பிரச்சினை ஓரளவு தீர்க்கப்பட்டுள்;ளது என்றால் அது மிகையல்ல  மேலும் ஆரம்பத்தில் வேடசந்தூர் தொகுதிக்கு காவிரிக் குடிநீரை கொண்டு வரும்  போது இரண்டு கிணறுகள் அமைத்து குழாய்கள் மூலம் கொண்டு வரப்பட்டது. தற்போது அதில் ஒரு கிணறு பழுதடைந்து விட்டது. எனவே மீண்டும் காவிரியில் புதியதாக இரண்டு கிணறுகள் அமைத்து பழுதடைந்த மோட்டார் மற்றும் குழாய்களை புதியதாக மாற்றவும் ரூ82 கோடி நிதி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு திட்ட அறிக்கை அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கியவுடன்  அதற்கான பணிகள் உடனே தொடங்கப்படும். இத்திட்ட பணிகள் முடிந்து விட்டால்  வேடசந்தூர்  தொகுதிக்குள்  உள்ள  அனைத்து குக்கிராமங்களுக்கும் காவிரி குடிநீர் வசதி செய்து தரப்படும்.  எவ்வளவு வறட்சி நிலவினாலும் குடிநீர் பற்றாக்குறை  என்பது எப்போதும்  இருக்காது

மேலும் நான் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றத்திலிருந்து மக்களின் அடிப்படை  வசதிகளான குடிநீர், சாலை வசதி  சுகாதார வசதி  போன்றவற்றிற்கு மிகவும்  முக்கியத்துவம் கொடுத்து வருகின்றேன். அதையொட்டி சுகாதாரத் துறையின் மூலம் வேடசந்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு தரமேம்பாட்டிற்க்காக கட்டமைப்பு வசதிக்காகவும் ரூ5 கோடி  மற்றும் வேடசந்தூர் தொகுதியில் உள்ள தரம் உயர்த்தப்பட்ட  மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிற்கும்  மேலே கூறிய  காரணங்களுக்காக ரூ15 கோடி ஆக மொத்தம் 20 கோடி  நிதி வேண்டி துணை இயக்குநர் நலப்பணிகள் மூலம் திட்ட அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டு அவர்மூலம் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  விரைவில் நிதி ஒதுக்கியவுடன்  பணிகள் தொடங்கப்படும் என்று எம்.எல்.ஏ காந்திராஜன்  தெரிவித்தார். 

1993-ல் சட்டமன்ற  உறுப்பினராக இருந்த காந்திராஜன்  தமிழகத்திலே இரண்டாவதாக  வேடசந்தூர் தொகுதியில் அதிக ஓட்டுக்கள் பெற்ற எம்.எல்.ஏ என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ராஜலட்சுமி, பாளையம் நகரச் செயலாளர் சம்பத், முன்னால் மாவட்ட துணைத் தலைவர் ஜுவா, முன்னால் எம்.எல்.ஏ கிருஷ்ணன், மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் சக்திவேல் கருப்பையா, கதிரவன், ராஜமாணிக்கம் சிவபெருமான், மணிமாறன், தாமரைக் கண்ணன், நைனார் முகமது, பொன் சுப்ரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து