முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ஞாயிற்றுக்கிழமை, 6 பெப்ரவரி 2022      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

விருத்தாசலம் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று காலை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. 20 வருடத்திற்கு நேற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதை முன்னிட்டு கடந்த 3-ம் தேதி இரவு தருமபுரம் 27-வது ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முதல் கால யாக பூஜையை தொடங்கி வைத்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால பூஜைகள் பூர்ணாஹூதி, தீபாராதனை, மாலை 6 மணிக்கு மேல் மூன்றாம் கால பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பிரமாண்ட யாகசாலையில் மூன்றாம் கால பூஜைகள், தீபாராதனை நடந்தது.

அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலை நான்காம் கால பூஜை மற்றும் மாலை ஐந்தாம் கால பூஜைகள் நடைபெற்று முடிந்து, நேற்று காலை ஆறாம் கால பூஜை தொடங்கி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து