முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு 264 ரூபாய் அதிகரிப்பு

திங்கட்கிழமை, 18 ஏப்ரல் 2022      வர்த்தகம்
Gold 2021 11 23

சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.40,376-க்கு விற்பனையானது.

தங்கம் விலை கடந்த பல நாட்களாகவே ஏறுமுகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த 10 நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 10-ம் தேதி 1 பவுன் தங்கம் ரூ. 39,352-க்கு விற்கப்பட்டது. 11-ந் தேதி 39,568ஆக உயர்ந்தது. 12-ந் தேதி பவுனுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.39,567ஆக விற்றது. அதன்பிறகு 13-ந் தேதி ரூ.39,968ஆக உயர்ந்தது.

கடந்த 24-ந் தேதி தமிழ் புத்தாண்டு அன்று தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்தது. அன்று 1 பவுன் தங்கம் ரூ.40,096-க்கு விற்றது. மறுநாள் 15-ந் தேதி பவுனுக்கு 8 ரூபாய் குறைந்து ரூ.40,088 ஆக விற்பனையானது. கடந்த 16-ந் தேதி மீண்டும் உயர்ந்து ரூ.40,112-க்கு விற்கப்பட்டது. நேற்று அதே விலையில் நீடித்தது.

இந்த நிலையில் தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.264 அதிகரித்தது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.40,376ஆக விலை உயர்ந்து விற்பனையானது. கிராமுக்கு ரூ.33 அதிகரித்தது. நேற்று 1 கிராம் தங்கம் ரூ.5047-க்கு விற்பனையானது. இதேபோல் வெள்ளி விலையும் நேற்று அதிகரித்தது. கிராமுக்கு ரு.1 அதிகரித்து ரூ.75.20-க்கு விற்பனையானது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.75,200-க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து