முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 6.50 லட்சம் பேர் விண்ணப்பம் : தேர்வு தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும்

வெள்ளிக்கிழமை, 13 மே 2022      தமிழகம்
Application 2022 05 13

Source: provided

சென்னை : டெட் தேர்வு நடத்தப்படும் தேதி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும். அதே போல் டெட் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படலாம் என்று பரவலாக பேசப்படுகிறது.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி 8-ம் வகுப்பு வரையிலான பட்டதாரி ஆசிரியர்களுக்கும், இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு (டெட்) தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டெட் தேர்வு வருகிற ஜூலை மாதத்தில் நடத்தப்படும் என்று தெரிகிறது. இதற்காக கடந்த மார்ச் 7-ந்தேதி விண்ணப்பம் கொடுக்க தொடங்கினார்கள்.

டெட் முதல் தாள், டெட் இரண்டாம் தாள் அனைத்துக்கும் சேர்த்து மொத்தம் 6.50 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.டெட் தேர்வு நடத்தப்படும் தேதி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும். அதே போல் டெட் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படலாம் என்று பரவலாக பேசப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2019-க்கு பிறகு 3 ஆண்டாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து