முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர்க் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ரஷிய வீரருக்கு வாழ்நாள் சிறை தண்டனை உக்ரைன் கோர்ட்டு தீர்ப்பு

திங்கட்கிழமை, 23 மே 2022      உலகம்
Ukrainian-Court 2022-05-22

ரஷியா உக்ரைன் இடையேயான போரின், முதலாவது போர்க்குற்ற விசாரணையில் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள நீதிபதிகள் குழு, போர்க்குற்ற விசாரணையில் நேற்று தீர்ப்பு வழங்கியது. 

21 வயது ரஷ்ய ராணுவ வீரர், உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பின் ஆரம்ப கட்டத்தில், நிராயுதபாணியான உக்ரைன் நாட்டை சேர்ந்த 62 வயது மூதாட்டியை கொன்றதாக போர் குற்றவாளி கைது செய்யப்பட்டார். உக்ரைனின் வடகிழக்கு சுமி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் உக்ரேனிய குடிமகனை தலையில் சுட்டுக் கொன்றார். 

இந்நிலையில், அவர் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டார். தன் மீதான அழுத்தத்தின் காரணமாக அவ்வாறு செய்துவிட்டதாக அவர் கோர்ட்டில்  தெரிவித்தார். அனைத்து தண்டனை நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார். மேலிடத்திலிருந்து உத்தரவிடப்பட்டதை அடுத்து அந்த நபரை சுட்டதாக அவர் சாட்சியம் அளித்துள்ளார். 

அவர் கூறியதாவது;- "நான் உண்மையாக வருந்துகிறேன். அந்த சம்பவம் நடக்க நான் விரும்பவில்லை, நான் அங்கு இருக்க விரும்பவில்லை, ஆனால் அது நடந்தது. மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். இதற்காக அனைத்து தண்டனை நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளத் தயார்" என்றார். 

போர் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் எனக் கேட்ட வழக்கறிஞர்கள், அவர் இது ஒரு கிரிமினல் குற்றம் என்பதை நன்கு அறிந்துகொண்டே இந்த செயலை செய்தார் எனத் தெரிவித்துள்ளனர். இந்த போர்க்குற்ற விசாரணையில் உக்ரைன் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதன்படி, போர்க் குற்றங்களுக்கான முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ரஷ்ய வீரர் வாடிம் ஷிஷிமரின்க்கு வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து