முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

11 மாநில சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டம்: 100 கோடி பேரை சந்திக்க பா.ஜ.க. தலைவர்கள் முடிவு

திங்கட்கிழமை, 23 மே 2022      இந்தியா
BJP 2022 02 06

Source: provided

புதுடெல்லி : 11 மாநில சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் விதமாக 100 கோடி பேரை சந்திக்க பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். பா.ஜனதா ஆட்சி மூலம் கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு பலன்களை அனுபவித்து வரும் 100 கோடி பயனாளிகளை அடையாளம் கண்டு பட்டியலிட்டுள்ளனர்.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு வருகிற 30-ந்தேதி 8-வது ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. எனவே 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு இப்போதே அந்த கட்சி தயாராக தொடங்கி இருக்கிறது. அதற்கு முன்னதாக அதாவது அடுத்த 2 ஆண்டுகளில் 11 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என்று முக்கியமான மாநிலங்கள் தேர்தலை சந்திக்கின்றன. இதை கருத்தில் கொண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த பா.ஜ.க. ஆலோசனை கூட்டத்தில் பல அதிரடி முடிவுகளை மூத்த தலைவர்கள் எடுத்து உள்ளனர்.

முதல்கட்டமாக உத்தர பிரதேசத்தில் சமூக வலை தளங்களில் நன்கு பயிற்சி பெற்ற 10 ஆயிரம் பேரை களம் இறக்கி உள்ளனர். இதே போன்று மற்ற மாநிலங்களிலும் சமூக வலைதளங்களில் பலரை பயிற்சி அளித்து பா.ஜ.க.வின் அடிமட்டததை வலுப்படுத்த ஓசையின்றி ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கிடையே பா.ஜனதா ஆட்சி மூலம் கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு பலன்களை அனுபவித்து வரும் 100 கோடி பயனாளிகளை அடையாளம் கண்டு பட்டியலிட்டுள்ளனர்.

இந்த 100 கோடி பேரையும் பா.ஜ.க. நிர்வாகிகள் சந்தித்து பேச வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பா.ஜ.க. நிர்வாகிகள் வீடு, வீடாக கதவை தட்டி பா.ஜ.க. ஆட்சியின் சாதனைகளை விளக்கி சொல்லப் போகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 hours ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 4 hours ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து