முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க ஆட்சி ஹிட்லர் ஆட்சியை விட மோசமானது : மேற்குவங்க முதல்வர் விமர்சனம்

திங்கட்கிழமை, 23 மே 2022      இந்தியா
Maumta-Banerjee 2022 01 23

Source: provided

கொல்கத்தா : மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி மாநிலங்களின் விவகாரங்களில் தலையிட்டு வருகிறது என்று மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். 

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை மிகக்கடுமையாக எதிர்த்து வருபவர் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி. மோடி அரசு மக்கள் விரோத கொள்கைகளை கடைபிடித்து வருவதாக தொடர்ந்து விமர்சித்து வரும் மம்தா பானர்ஜி, நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், சர்வாதிகாரி ஹிட்லர் ஆட்சியை விட பா.ஜ.க ஆட்சி மோசமானது என மிகக்கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 

மம்தா பானர்ஜி கூறுகையில், " "மத்தியில் ஆளும் அரசு விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி மாநிலங்களின் விவகாரங்களில் தலையிட்டு வருகிறது. பா.ஜ.க தலைமையிலான ஆட்சியானது நாட்டின் கூட்டாட்சி அமைப்பை சிதைத்து வருகிறது.

ஹிட்லர், ஜோசப் ஸ்டாலின் மற்றும் பெனிடோ முசோலினி ஆட்சியைக் காட்டிலும் பா.ஜ.க-வின் ஆட்சி மோசமானது. விசாரணை அமைப்புகளுக்கு தன்னாட்சி அதிகாரம் கொடுக்க வேண்டும். எந்த அரசியல் தலையீடும் இன்றி விசாரணை முகமைகள் செயல்பட வேண்டும்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!