முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை வெள்ளிங்கிரியில் 7 மலைகள் ஏறிய அமைச்சர் சேகர்பாபுவுக்கு குவியும் பாராட்டுகள்

செவ்வாய்க்கிழமை, 24 மே 2022      தமிழகம்
Sekarbapu 2022-05-22

Source: provided

சென்னை : கோவை வெள்ளிங்கிரியில் ஏழு மலைகள் ஏறிய அமைச்சர் சேகர்பாபுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. செங்குத்தான மலைப்பாதையில் பக்தர்கள் ஏறுவதற்கு சில இடங்களில் கடினமான சூழ்நிலை இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

கோவை வெள்ளிங்கிரியில் உள்ள 7 மலைகளை தாண்டி அங்குள்ள சிவனை பக்தர்கள் வழிபட்டு வருவார்கள். கரடு முரடாகவும், செங்குத்தாகவும் காணப்படும் இந்த மலையில் பக்தர்கள் பிடிமானத்துக்காக குச்சியை ஊன்றியபடியே மலையேறுவார்கள்.

சிறப்புமிக்க இந்த வெள்ளிங்கிரி கோவிலில் மலைப்பாதை அமைக்க சாத்தியக்கூறுகள் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள 7 மலைகளிலும் ஏறிச்செல்வது என அவர் முடிவு செய்தார்.

அதன்படி காலை 7 மணிக்கு மலையேற தொடங்கினார். பிற்பகல் 2 மணி அளவில் அவர் 6-வது மலைக்கு சென்றடைந்தார். அங்குள்ள ஆண்டி சுனையில் குளித்தார். பின்னர் மீண்டும் மலையேற தொடங்கி மாலையில் 7-வது மலையை அடைந்து சுவாமி தரிசனம் செய்தார்.

இந்த பயணம் குறித்து அமைச்சர் சேகர்பாபு கூறுகையில் வெள்ளிங்கிரி மலை ஏற்றம் புதிய அனுபவம் அளித்தது எனவும், அதிக காற்று, அதிக குளிர் இருப்பதாகவும் தெரிவித்தார். செங்குத்தான மலைப்பாதையில் பக்தர்கள் ஏறுவதற்கு சில இடங்களில் கடினமான சூழ்நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழக வரலாற்றில் அமைச்சர் ஒருவர் 7 மலைகளை ஏறி இறங்கியது இதுவே முதன்முறை என்கிறார்கள் பக்தர்கள். இதனால் அமைச்சர் சேகர்பாபுவுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து