முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

புதன்கிழமை, 22 ஜூன் 2022      தமிழகம்
Weather-Center 2021 06-30

Source: provided

சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வளிமண்டல கிழடுக்கு சுழற்சியால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று முதல் ஜூன் 26ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று வட கர்நாடகா, மத்திய கிழக்கு அரபிக்கடலில் பலத்த சூறாவளி வீசக்கூடும். ஜூன் 24,25,26ல் லட்சத்தீவு, கேரளா, கர்நாடக கரையோரம், மத்திய கிழக்கு, தென் கிழக்கு அரபிக்கடலில் சூறாவளி வீசக்கூடும். மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து