முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியதால் அச்சம்

புதன்கிழமை, 22 ஜூன் 2022      இந்தியா
India-Vaccine 2022 02 22

Source: provided

திருவனந்தபுரம் : கேரளத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அம்மாநில மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். 

இதுகுறித்து கேரள மாநில சுகாதாரத்துறை தகவலின்படி, மாநிலத்தில் செவ்வாயன்று புதிதாக 4,224 கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 66,08,717 ஆக உயர்ந்துள்ளது. கடைசியாக கடந்த பிப்ரவரியில் ஒருநாள் பாதிப்பு 4 ஆயிரத்துக்கும் மேல் பதிவானது. இதையடுத்து இந்த ஜூன் மாதத்தில் பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. 

ஜூன் 21 நிலவரப்படி கொரோனா காரணமாக புதிதாக 20 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளத்தில் மொத்த உயிரிழப்புகள் 69,917 ஆகப் பதிவாகியுள்ளது.  தொற்று பாதித்து சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 24,333 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,464 ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!