முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புது மனைவியை ராணுவ ஹெலிகாப்டரில் வீட்டுக்கு அழைத்து வந்த தலிபான் தளபதி

திங்கட்கிழமை, 4 ஜூலை 2022      உலகம்
Taliban 2022 07 04

Source: provided

காபூல் : ஆப்கானிஸ்தானில் தனது புது மனைவியை ராணுவ ஹெலிகாப்டரில் வீட்டிற்கு தலிபான் தளபதி அழைத்து வந்துள்ளார் என்று அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தான் நாட்டு காமா பிரஸ் என்ற உள்ளூர் ஊடகம் வெளியிட்டு உள்ள தகவலில், தலிபான்களின் ஹக்கானி பிரிவின் தளபதியாக இருந்து வருபவர், தனது புது மனைவியை ஹெலிகாப்டர் ஒன்றில் வைத்து அழைத்து வந்துள்ளார் என தெரிவித்து உள்ளது. 

அந்த தளபதி கோஸ்ட் மாகாண பகுதியை சேர்ந்தவர். அவரது மனைவி, ஆப்கானிஸ்தானின் கிழக்கே லோகர் மாகாணத்தில் பர்கி பராக் மாவட்டத்தில் உள்ள ஷா மஜார் பகுதியை சேர்ந்தவர்.

இதுபற்றி வெளியான வீடியோ ஒன்றில், புது மனைவியை தளபதி ராணுவ ஹெலிகாப்டரில் சொந்த ஊருக்கு அழைத்து வரும் காட்சிகள் இடம் பெற்று உள்ளன. அந்த ஹெலிகாப்டர் தளபதியின் வீடு அருகே தரையிறங்கும் காட்சிகளும் உள்ளன. 

இது தவிர, தனது மாமனாரிடம் அந்நாட்டு மதிப்பின்படி 12 லட்சம் ஆப்கானிய கரன்சிகளை வரதட்சணையாக வழங்கிய தளபதி அவரது மகளின் கரம்பற்றியுள்ளார். எனினும் இந்த செய்தியை தலிபானின் துணை செய்தி தொடர்பாளர் காரி யூசுப் அகமதி மறுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் போலியானவை என தெரிவித்து உள்ளார்.

எனினும், சமூக ஊடகத்தில் வெளியான இந்த வீடியோவை கண்ட மக்கள் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர். பொது சொத்துகளை தவறாக பயன்படுத்தும் செயல் என கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!