முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த வாரம் திரைக்கு வரும் குருதி ஆட்டம்

சனிக்கிழமை, 30 ஜூலை 2022      சினிமா
Blood-game 2022 07-31

Source: provided

அதர்வா நடித்துள்ள குருதி ஆட்டம் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் இப்படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரியா பவானி சங்கர், ராதாரவி, ராதிகா சரத்குமார், வத்சன் சக்கரவர்த்தி, வினோத் சாகர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் குருதி ஆட்டம் படத்தை இயக்கி இருக்கிறார்.  ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நடிகர் அதர்வாவுக்கு படங்கள் சிறப்பாக அமையாத நிலையில், அந்த குறையை குருதி ஆட்டம் திரைப்படம் போக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அட்ரஸ், ட்ரிக்கர், ஒத்தைக்கு ஒத்த, நிறங்கள் 3 உள்ளிட்ட படங்களில் அதர்வா நடித்து வருகிறார். 8 தோட்டாக்கள் படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் வரவேற்பை பெற்ற நிலையில் அந்த படத்தின் இயக்குனர் இயக்கி இருப்பதால் குருதி ஆட்டம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!