முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியபாளையம் பவானியம்மன் கோவில் நிர்வாகிகளிடம் தங்க முதலீட்டு பத்திரம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2022      ஆன்மிகம்
CM-1 2022 08 11

சென்னை தலைமைச் செயலகத்தில், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், அருள்மிகு  பவானியம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்களால் உண்டியல் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட திருக்கோயிலுக்குத் தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, பலமாற்றுப் பொன் இனங்களை மும்பை ஒன்றிய அரசின் உருக்காலையில் உருக்கி தூய தங்கக்கட்டிகளாக முதலீடு செய்யப்பட்டதற்கான தங்க முதலீட்டு பத்திரத்தினை, அத்திருக்கோயில் நிர்வாகிகளிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். 

2021-2022ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில், கடந்த 10 ஆண்டுகளாக திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களில், திருக்கோயிலுக்குத் தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய இனங்களை மும்பையிலுள்ள ஒன்றிய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத்தங்கமாக மாற்றி திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து, அதிலிருந்து பெறப்படும் வட்டி மூலமாக திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகளை கண்காணிப்பதற்கு 3 மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஓய்வுபெற்ற  நீதிபதிகள் தலைமையிலான குழுக்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் சென்னை மண்டலத்திற்கு ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி துரைசாமிராஜூ தலைமையில் குழு அரசால் அமைக்கப்பட்டது. 

இக்குழுவின் முன்னிலையில், பெரியபாளையம், அருள்மிகு  பவானியம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்களால் உண்டியல் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட பலமாற்று பொன் இனங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, அரக்கு, அழுக்கு, போலிக்கற்கள் மற்றும் இதர உலோகங்கள் நீக்கப்பட்டு 130 கிலோ 512 கிராம் எடையுள்ள பலமாற்றுப் பொன் இனங்கள் பிரித்தெடுக்கப்பட்டன.  இப்பொன் இனங்களை இத்திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் தீர்மானத்தின் அடிப்படையில் மும்பையிலுள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கி தூய தங்கக் கட்டிகளாக மாற்றி பாரத ஸ்டேட் வங்கியில் தங்கப் பத்திரமாக முதலீடு செய்திடும் பொருட்டு, 91 கிலோ 61 கிராம் எடையுள்ள தூய தங்கக்கட்டிகள் திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் பெரியபாளையம் அருள்மிகு  பவானியம்மன் திருக்கோயில் பெயரில் பாரத ஸ்டேட் வங்கி, மும்பை கிளையில் முதலீடு செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ. 46 கோடியே 31 லட்சம் ஆகும். மேற்படி தங்க மதிப்பீட்டிற்கு வழங்கப்படுகின்ற வட்டி வீதம் 2.25 சதவீதம் ஆகும். இதன்மூலம் ஆண்டொன்றுக்கு கிடைக்கப்பெறும் வட்டித் தொகையான ரூ.1.04 கோடி இத்திருக்கோயில் சார்ந்த திருப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும். 

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி துரைசாமிராஜூ,  சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்                       குமரகுருபரன்,  கூடுதல் ஆணையர் (நிர்வாகம்)  கண்ணன், வேலூர் மண்டல இணை ஆணையர்  லட்சுமணன், திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் அஞ்சன் லோகமித்ரா மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து