முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகளாவிய போட்டிகளை தமிழகத்தில் நடத்த அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Stalin 2021 11 29

உலகளாவிய போட்டிகளை தமிழகத்தில் நடத்துவதற்கு அதிக வாய்ப்பை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்தியுள்ளதாக தமிழக மக்களுக்கும், அரசுக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார் . 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்களும் அரசும் மிகச் சிறப்பாக நடத்தியுள்ளார்கள். உலகெங்கிலும் இருந்து இந்த போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று, நமது மகத்தான கலாச்சாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள் என்று பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 

தங்களது கனிவுமிகு பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. விருந்தோம்பலும் தன்மானமும் தமிழர்களின் இணைபிரியா இருபெரும் பண்புகள் ஆகும்.  தொடர்ச்சியான உங்களது ஆதரவையும், இது போல இன்னும் பல உலக அளவிலான போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளைத் தமிழ்நாட்டுக்கு வழங்குமாறும் தங்களைக் கோருகிறேன். யாதும் ஊரே யாவரும் கேளிர். இவ்வாறு அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து