முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொறியியல் முடித்த மாணவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி.யில் 6 மாத பயிற்சி

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2022      தமிழகம்
IIT 2022 08 11

சென்னை ஐ.ஐ.டி.யின் பிரவர்தக் டெக்னாலஜிஸ், சோனி இண்டியா சாப்ட்வேர் சென்டருடன் இணைந்து தொழில்துறைக்கு தயார் நிலையில் உள்ள மாணவர்களுக்கு தொழில்நுட்ப திறன்களை அளிக்க  இருக்கிறது. 2020-21 மற்றும் 2021-22 ம் ஆண்டுகளில் பொறியியல் படிப்பு முடித்த மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் இந்த பயிற்சியில் சேரலாம். விருப்பமுள்ள மாணவர்கள் https://sonyfs.pravartak.org.in/ என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி கூறுகையில், 6 மாதங்கள் கொண்ட இந்த கோர்ஸில் ஏராளமான மாணவர்கள் பயன்பெறலாம். குறிப்பாக, இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு இந்த முயற்சி பயனளிக்கும். சோனி இண்டியா சாப்ட்வேர் சென்டர் இந்த கோர்ஸில் முன்னிலை வகிக்கும் 15 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பையும், பிரவர்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் மீதியுள்ள மாணவர்களுக்கு நேர்காணலுக்கும் ஏற்பாடு செய்து இதர கம்பெனிகளில் வேலை வாய்ப்பு பெற்று தரும். 

நேர்முக தேர்வை தொடர்ந்து ஓர் எழுத்து தேர்வும் நடைபெறும். அதில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு டிரெய்னிங் புரோகிராமின் கீழ் உதவித்தொகை வழங்கப்படும். டிரெய்னிங் புரோகிராமை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து