முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: வரும் 17-ம் தேதி சி.பி.ஐ விசாரணைக்கு நேரில் ஆஜராகிறேன்: செந்தில் பாலாஜி

செவ்வாய்க்கிழமை, 10 மார்ச் 2026      தமிழகம்
Senthi-Balaji 2024-12-09

கரூர், கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொர்பாக வருகின்ற மார்ச் 17 அன்று சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளதாக தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக த.வெ.க. தலைவர் மற்றும் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே, நேற்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகுமாறு விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் தேர்தல் பணிகள் காரணமாக விசாரணையில் இருந்து விலக்கு அளித்து சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என சி.பி.ஐ-க்கு விஜய் கோரிக்கை விடுத்தார்.

இதற்கிடையே, கரூர் சம்பவம் தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பட்டது. இதுதொடர்பாக செந்தில் பாலாஜி எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்குப்பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளதாக கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து