முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த சிவரஞ்சனிக்கு மாநில இளைஞர் விருது: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த சிவரஞ்சனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2022-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது.

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றிய வேலூர் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார், ஸ்ரீகாந்த் மற்றும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த முகமது ஆஷிக் ஆகியோர் மாநில இளைஞர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நாகப்பட்டினத்தை சேர்ந்த சிவரஞ்சனியும் முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நெல் ஜெயராமனுக்கு பின் பல மாநிலங்களுக்கு சென்று 1250 நெல் ரகங்களை மீட்டு எடுத்தவர் ஆவார்.

முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு தேர்வாகியுள்ள இவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதும் , ரூ.1 லட்சம் பரிசு தொகையும், பாராட்டு பத்திரமும் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து