முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுதந்திர தினம்: தே.மு.தி.க. அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி விஜயகாந்த் மரியாதை

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022      அரசியல்
Vijayakanth 2022-08-15

சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சி அலுவலகத்தில், கட்சியின் நிறுவனத்தலைவர் விஜயகாந்த் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

இதுதொடர்பாக தே.மு.தி.க. வெளியிட்டுள்ள செய்தி: "இந்தியாவின் 75- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த் நேற்று (15.08.2022) கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை கழகத்தில் 118 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியினை ஏற்றிவைத்தார்.

இந்நிகழ்வில்,கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் , தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலார்கள், மகளிர் அணியினர், பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், கழக தொண்டர்கள் கலந்துகொண்டர். பின்னர் சுதந்திர தினத்தையொட்டி பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து