முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான வாக்கெடுப்பு துவங்கியது

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2022      விளையாட்டு
Ukraine 2022--09-24

Source: provided

கீவ் : உக்ரைன் பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான பொதுவாக்கெடுப்பு தொடங்கியது.

உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி முதல் ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவை கைப்பற்ற முடியாத நிலையில் ரஷ்ய படைகள் கிழக்கு மற்றும் மேற்கு உக்ரைன் மீது கவனம் செலுத்த தொடங்கின. இந்த நிலையில் ஏற்கனவே ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் வசம் உள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் மற்றும் தற்போது ரஷ்ய படைகளம் வசம் இருக்கும் கெர்சன், ஜாபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்களையும் ரஷ்யாவுடன் இணைப்பது குறித்த பொதுவாக்கெடுப்பு நேற்று முன்தினம் தொடங்கியது. 

எனினும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இந்த வாக்கெடுப்பு நடப்பதால் முடிவுகள் ரஷ்யாவுக்கு சாதகமாகவே அமையும் என கூறப்படுகிறது. இதனிடையே வருகிற 27-ம் தேதி வரை இந்த வாக்கெடுப்பு நடத்தப்படும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரிகள் வாக்கு பெட்டிகளை வீடு வீடாக எடுத்து சென்று, வாக்கு பதிவு செய்வதாகவும், இறுதி நாளான 27-ம் தேதி மட்டும் மக்கள் வாக்கு சாவடிகளுக்கு சென்று வாக்களிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் உக்ரைனின் இந்த 4 பிராந்தியங்களில் இருந்து ரஷ்யாவுக்கு இடம் பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்காக ரஷ்யாவிலும் வாக்கெடுப்பு நடத்தப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து