முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெட்ரோ ரயிலில் பொது பயண அட்டை டிசம்பர் இறுதியில் வழங்க ஏற்பாடு

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2022      தமிழகம்
Metro-Rail 2022-11-27

Source: provided

சென்னை : சென்னை மெட்ரோ ரயிலில் தேசிய பொது பயண அட்டை (என்.சி.எம்.சி) அடுத்த மாதம் இறுதியில் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் மெட்ரோ ரயில், மாநகர பஸ், புறநகர் ரயிலில் ஒரே பயண அட்டையில் பயணம் செய்ய முடியும்.

சென்னையில் பெருகி வரும் மக்கள் தொகைக்கும், நகர விரிவாக்கத்துக்கும் ஏற்ப போக்குவரத்து வசதிகள் திட்டமிடப்பட்டு வருகிறது. தற்போது சென்னையில் மாநகர பஸ், மெட்ரோ ரயில், புறநகர் மின்சார ரயில் சேவையை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்காக தனித்தனியாக பயணச் சீட்டு எடுத்து பயணம் செய்கிறார்கள். இந்த நிலையில் மெட்ரோ ரயில், மாநகர பஸ், புற நகர் மின்சார ரயிலில் செல்பவர்கள் பொதுவான ஒரே பயண அட்டை மூலம் பயணம் செய்வதற்கான புதிய திட்டம் அடுத்த மாதம் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

இதுதொடர்பான சாத்தியக்கூறுகள் தொடர்பாக கடந்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழும கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது புதிய பயண திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததாக தெரிகிறது. இதையடுத்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அடுத்த மாதம் இறுதியில் தேசிய பொது பயண அட்டையை வழங்க இருக்கிறது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. 

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறும் போது, சென்னை மெட்ரோ ரயிலில் தேசிய பொது பயண அட்டை (என்.சி.எம்.சி) அடுத்த மாதம் இறுதியில் வழங்கப்பட உள்ளது.

இதன்மூலம் மெட்ரோ ரயில், மாநகர பஸ், புறநகர் ரயிலில் ஒரே பயண அட்டையில் பயணம் செய்ய முடியும். பார்க்கிங் கட்டணம், சுங்கச்சாவடி கட்டணமும்செலுத்தலாம். டிசம்பர் இறுதியில் வழங்கப்படும் இந்த பொதுவான பயண அட்டை முதலில் புதிய பயணிகளுக்கு வழங்கப்படும்.

தற்போது உள்ள பயண அட்டையை பயணிகள் தொடர்ந்து பயன்படுத்தலாம். தேசிய பொது பயண அட்டை தயாராக உள்ளது. வங்கிகளுடன் சில சிக்கல்கள் உள்ளன. அதை சரி செய்யும் பணி நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து