முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்து எத்தனை கேள்விகள் கேட்டாலும் கவர்னருக்கு பதில் அளிக்க தயார்: அமைச்சர் ரகுபதி பேட்டி

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2022      தமிழகம்
Raghupati 2022 11 25

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக கவர்னர் தரப்பில் இருந்து எத்தனை கேள்விகள் கேட்டாலும் பதிலளிக்க தயாராக உள்ளோம் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு கவர்னர் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த கருத்தை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக கவர்னர் தரப்பில் இருந்து எத்தனை கேள்விகள் கேட்டாலும் பதிலளிக்க தயாராக உள்ளோம் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ஆன்லைன் ரம்மி அவசர சட்டம் கொண்டு வந்து உடனடியாக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றினோம். அவசர சட்டத்திற்கு அரசாணை வெளியிடாததில் எந்தத் தவறும் இல்லை. ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க கவர்னரிடம் நேரில் வலியுறுத்தினோம். கவர்னர் தரப்பில் இருந்து எத்தனை கேள்விகள் கேட்டாலும் பதிலளிக்க தயாராக உள்ளோம். இந்தியாவுக்கே முன்மாதிரி சட்டத்தை இயற்றியுள்ளோம். ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை மட்டுமின்றி ஒழுங்கு முறைகளையும் கொண்டு வரவுள்ளோம். அவசர சட்டத்திற்கு அரசாணை வெளியிடாததற்கான காரணத்தை கவர்னரிடம் ஏற்கெனவே தெரிவித்துள்ளோம் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து