முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மசோதா வந்தவுடனே கையெழுத்து போட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது கவர்னர் தமிழிசை தூத்துக்குடியில் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2022      தமிழகம்
Tamilisai 2022 12 04

Source: provided

தூத்துக்குடி ; தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

ஜி-20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்குகிறது. இது நமக்கெல்லாம் பெருமைமிக்க நிகழ்வு. இதற்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில் முதல்வர்கள்  பங்கேற்கின்றனர். வருகிற 9-ம் தேதி அனைத்து மாநில கவர்னர்கள் மற்றும் முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். 

விவேகானந்தர் உலகத்தின் குருவாக பாரதம் இருக்க வேண்டும் என்று நினைத்தாரோ, அதே போல இன்று நாம் ஒரு முன்னேற்றமான பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். அதற்காக நாம் பிரதமருக்கு நன்றி சொல்ல வேண்டும். அதுமட்டுமல்ல, சீனாவில் தற்போது பொது முடக்கம் உள்ளது. கொரோனா தொற்றுகள் அதிகரித்து வருகிறது. இவை அனைத்தில் இருந்தும் நாம் தப்பித்தோம். அதற்கு தடுப்பூசி தான் காரணம். இவ்வாறு அவர் கூறினார். 

தமிழக ஆளுனரை திரும்ப பெற வேண்டும் என தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, பதில் அளித்த தமிழிசை,  அரசியல் ரீதியாக  ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவை ஏன் நிறைவேற்ற முடியவில்லை என்று கவர்னர் சில தகவல்களை சொல்லி இருக்கிறார். கவர்னர் என்றாலே எந்தவித சந்தேகமும் படாமல் உடனே கையெழுத்து போட வேண்டும் என்று இல்லை. 

 

அவர்கள் அமைச்சரை அழைத்து சில விளக்கங்களை கேட்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். விளக்கம் கிடைத்ததும் அவர் அதற்கான முடிவு எடுக்கலாம். ஒரு கவர்னருக்கு மசோதா வந்த உடனேயே கையெழுத்து போட்டு தான் ஆக வேண்டும் என்று கிடையாது. அதில் சில சந்தேகங்கள் இருந்தால், அவர்கள் அதற்கான ஆலோசனை கேட்பதற்கு நேரம் எடுத்து கொள்ளலாம் என்று அவர் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து